/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறுமி பாலியல் பலாத்காரம் மாணவர் மீது போக்சோ வழக்கு
/
சிறுமி பாலியல் பலாத்காரம் மாணவர் மீது போக்சோ வழக்கு
சிறுமி பாலியல் பலாத்காரம் மாணவர் மீது போக்சோ வழக்கு
சிறுமி பாலியல் பலாத்காரம் மாணவர் மீது போக்சோ வழக்கு
ADDED : மே 11, 2025 01:40 AM
கோட்டக்குப்பம்: புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த 17 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட குழந்தைகள் நலக்குழு கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீஸ் விசாரணையில், திருவக்கரை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த அபின்ராஜ்,18; பாலிடெக்னிக் கல்லுாரியில் பயின்றபோது, சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தார். கடந்த ஜனவரி மாதம், அபின்ராஜ் சிறுமியை கட்டாய திருமணம் செய்து, கர்ப்பமாக்கியது தெரியவந்தது. போலீசார் அபின்ராஜ் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.