/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வழக்கறிஞர் உட்பட 3 பேர் கைது திருட்டு வழக்கில் போலீஸ் அதிரடி
/
வழக்கறிஞர் உட்பட 3 பேர் கைது திருட்டு வழக்கில் போலீஸ் அதிரடி
வழக்கறிஞர் உட்பட 3 பேர் கைது திருட்டு வழக்கில் போலீஸ் அதிரடி
வழக்கறிஞர் உட்பட 3 பேர் கைது திருட்டு வழக்கில் போலீஸ் அதிரடி
ADDED : நவ 28, 2025 06:31 AM

மரக்காணம்: மரக்காணம் அடுத்த கூனிமேட்டில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் பெண் வழக்கறிஞர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கூனிமேட்டை சேர்ந்தவர் குணசேகரன் மனைவி சங்கீதா, 32; இவர், கடந்த 8ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். 11ம் தேதி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 சவரன் நகை, 3,000 ரூபாய் பணம் திருடு போயிருந்தது.
இதேபோன்று, கூனிமேட்டை சேர்ந்த அப்துல் சுக்கூர் மனைவி ஜெயின்பீ, 47; வீட்டில் கடந்த 10ம் தேதி உடைத்து பீரோவில் இருந்த 2 சவரன் நகை, 50 கிராம் வெள்ளி கொலுசு திருடு போனது.
இது குறித்து மரக்காணம் போலீசார் தனித் தனியாக வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
மேலும், கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., ரூபன்குமார் தலைமையில் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் மணிமாறன், எஸ்.எஸ்,ஐ., சேனாதிபதி மற்றும் போலீசார் சி.சி.டி.வி., பதிவை ஆய்வு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் மரக்காணம் அருகே உள்ள வேப்பேரியில் சந்தேகப்படும்படியான 3 பேர், வீடு வாடகை எடுத்து தங்கியிருப்பது தெரியவந்தது.
போலீசார் அந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்ததில் ஒரு பெண் மற்றும் இரண்டு வாலிபர்கள் இருந்தனர்.
விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம், மேட்டுப்பட்டியை சேர்ந்த துரைராஜ் மகன் ரமேஷ்குமார், 42; இவரது மனைவி புவனேஸ்வரி, 29 ; வழக்கறிஞர். திருச்சி மாவட்டம், சு னைபுகாநல்லுார் மொட்டையன் மகன் வடிவேல், 30; என்பதும் தெரியவந்தது. மேலும், ரமேஷ்குமார், வடிவேல் இருவரும் ஒரு கொலை வழக்கிலும், 5க்கும் மேற்பட்ட திருட்டு வழக்கிலும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
கூனிமேடு பகுதியில் பூட்டியுள்ள வீடுகளை புவனேஸ்வரி நோட்டமிட்டு இருவரிடமும் கூறியதும், பூட்டை உடைத்து நகைகளை திருடி புதுச்சேரியில் உள்ள நகைக்கடையில் விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
இது குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்து, நகைகளை பறிமுதல் செய் தனர்.

