/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மோதலில் ஈடுபட்ட மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு போலீசார் 'அட்வைஸ்'
/
மோதலில் ஈடுபட்ட மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு போலீசார் 'அட்வைஸ்'
மோதலில் ஈடுபட்ட மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு போலீசார் 'அட்வைஸ்'
மோதலில் ஈடுபட்ட மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு போலீசார் 'அட்வைஸ்'
ADDED : டிச 19, 2025 05:59 AM

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.
கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வெளியே நேற்று முன்தினம் மோதலில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த மாணவர்களின் கோஷ்டி மோதல் குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கண்டாச்சிபுரம் இன்ஸ்பெக்டர் மூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து தலைமையிலான போலீசார் மேல்நிலை வகுப்பு மாணவர் களுக்கு கவுன்சிலிங் கொடுத்தனர்.
இன்ஸ்பெக்டர் மூர்த்தி பேசும்போது தொடர்ந்து ஒழுங்கீனமான நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபட்டால் அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் எனக் குறிப்பிட்டார்.
போதை பழக்கத்தில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது என அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஜெயசீலன், பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர் மாலதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.