/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலை விதிமுறைகளை பின்பற்ற வாகன ஓட்டிகளுக்கு போலீஸ் அட்வைஸ்
/
சாலை விதிமுறைகளை பின்பற்ற வாகன ஓட்டிகளுக்கு போலீஸ் அட்வைஸ்
சாலை விதிமுறைகளை பின்பற்ற வாகன ஓட்டிகளுக்கு போலீஸ் அட்வைஸ்
சாலை விதிமுறைகளை பின்பற்ற வாகன ஓட்டிகளுக்கு போலீஸ் அட்வைஸ்
ADDED : ஆக 04, 2025 01:32 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல்துறை செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில், அதிவிரைவு நெடுஞ்சாலை அதிகம் இருப்பதால், இரு சக்கர வாகனங்களில் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும். நேற்று திண்டிவனம்-புதுச்சேரி மார்க்கமாக பைக்கில் சென்ற 3 இளைஞர்கள் ஹெல்மெ ட் அணியாமல் அதிவேகமாக சென்றதால், ஓமந்துார் பகுதியில் விபத்தில் சிக்கி ஒருவர் இறந்தார். மீதிபேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
பெற்றோர், பிள்ளைகளை பிறந்தது முதல் பார்த்து, பார்த்து வளர்த்து, பிடித்ததை செய்துகொடுத்து, வேலைக்கு செல்வதற்கும் பைக்கும் வாங்கி தருகின்றனர்.
பெற்றோர்களின் கனவுகளும் அவர்களின் உழைப்பையும் பொருட்படுத்தாத, பிள்ளைகள் ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக சென்று விபத்துகளில் சிக்குவது வேதனை தருகிறது.
சாலை விதிகளை பின்பற்றாமல், ஹெல்மெட் அணியாமல், இரு சக்கர வாகனங்களில் அதிவேகம் பயணம் செய்து, விபத்து நேர்ந்து பாதிக்கப்படுவது, உங்களது தலை மட்டுமின்றி, உங்கள் தலைமுறையின் வாழ்க்கையும் தான்.
வாகனங்கள் பயணம் மேற்கொள்ள மட்டுமே. சாகசம் செய்யவோ, வேகத்தை காட்டும் இடமோ அல்ல. சாலை விதிகளை மிதித்து, பாதுகாப்பாக பயணம் சென்று மகிழ்ச்சியாக வாழ்ந்து, நமது தலைமுறையையும் வாழவைப்போம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

