/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விதிகளை மதித்து கவனமாக வாகனங்களை ஓட்டுங்கள் காவல்துறை அறிவுரை
/
விதிகளை மதித்து கவனமாக வாகனங்களை ஓட்டுங்கள் காவல்துறை அறிவுரை
விதிகளை மதித்து கவனமாக வாகனங்களை ஓட்டுங்கள் காவல்துறை அறிவுரை
விதிகளை மதித்து கவனமாக வாகனங்களை ஓட்டுங்கள் காவல்துறை அறிவுரை
ADDED : ஜன 22, 2025 08:58 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் விபத்து இழப்புகளை தவிர்க்க, வாகனங்களை ஓட்டும் இளைஞர்கள் தங்களின் குடும்பங்களை மனதில் வைத்து, கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் என்று, காவல் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையின்போது, சாலை விதிகளை பின்பற்றாமலும், ஹெல்மட் அணியாமலும், அதிவேகமாக வாகனங்களை ஓட்டியதால், 4 வாலிபர்கள் விபத்தில் சிக்கி இறந்தனர்.
விபத்துகளில் பலர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். வாலிபர்களின் அதிவேக பயணங்களால், அவர்களின் குடும்பங்களின் எதிர்காலம் சிதைந்து, குடும்ப வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், வாகனங்களில் வெளியே செல்பவர்கள், தங்களின் வருகைக்காக அவரவர் குடும்பங்கள் எதிர்நோக்கி காத்திருப்பதை கவனத்தில்கொண்டு, கவனமாக வாகனங்களை ஓட்ட வேண்டும். இளைஞர்கள் தங்களின் பொருப்பை உணர்ந்து, சாலை விதிகளை பின்பற்றி, வாகனங்களில் மெதுவாகவும், கவனமாகவும் செல்ல வேண்டும் என்று, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி., சரவணன் அறிவுறுத்தியுள்ளார்.