/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சி.சி.டி.வி., கேமரா அமைத்த போலீசாருக்கு நற்சான்றிதழ்
/
சி.சி.டி.வி., கேமரா அமைத்த போலீசாருக்கு நற்சான்றிதழ்
சி.சி.டி.வி., கேமரா அமைத்த போலீசாருக்கு நற்சான்றிதழ்
சி.சி.டி.வி., கேமரா அமைத்த போலீசாருக்கு நற்சான்றிதழ்
ADDED : ஜூன் 03, 2025 12:23 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், தங்கள் பகுதியில் அதிக சி.சி.டி.வி., கேமராக்களை அமைத்த போலீசாருக்கு நற்சான்றிதழ் வழங்கி எஸ்.பி., பாராட்டினார்.
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சார்பில், அந்தந்த போலீஸ் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், குற்றச் சம்பவங்களை தடுக்கவும், குற்றங்களை உடனுக்குடன் கண்டறியவும், மூன்றாம் கண் எனப்படும் சி.சி.டி.வி., கேமராக்களை அமைக்க உயர் அதிகாரிகளின் உத்தரவை போலீசார் செயல்படுத்தி வருகின்றனர். அதன்படி, தங்களது போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் அதிகளவில் சி.சி.டி.வி., கேமராக்களை அமைத்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் தமிழ்மணி, கிளியனூர் சப் இன்ஸ்பெக்டர் மாதவன், திருவெண்ணைநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோருக்கு, தங்கள் பகுதிகளில் அதிகளவில் சி.சி.டி.வி., கேமராக்களை அமைத்தமைக்கு, விழுப்புரம் எஸ்.பி.,சரவணன் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.