தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தொழிலாளி கொலை போலீசார் குவிப்பு

 தொழிலாளி கொலை போலீசார் குவிப்பு

 தொழிலாளி கொலை போலீசார் குவிப்பு


ADDED : பிப் 05, 2026 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 06:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வானுார்: பாரில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட நிலையில், இரு கிராமங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

வானுார் அடுத்த இடையஞ்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் வினோத் குமார் 40; கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் புதுச்சேரி மாநிலம் ஆலங்குப்பம் கிராமத்தில் உள்ள தனியார் ரெஸ்டோ பாரில் மது அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு மது அருந்திய வானுார் அடுத்த துருவை காலனியை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் அந்த கும்பல் தாக்கியதில், வினோத்குமார் உயிரிழந்தார். இது குறித்து தன்வந்தரி நகர் போலீசார், துருவை காலனியை சேர்ந்த, 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து, கார்த்திகேயன், ஜான் உட்பட மூவரை கைது செய்தனர்.

இந்த கொலை சம்பவத்தின் எதிரொலியாக, இடையஞ்சாவடி மற்றும் துருவை கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., ரூபன்குமார் உத்தரவில் இரு கிராமங்களிலும், 15க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us