ADDED : ஜூன் 12, 2025 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சார்பில், பொது மக்கள் குறைதீர் நாள் முகாம் நேற்று நடந்தது.
விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த முகாமில், எஸ்.பி., சரவணன் பங்கேற்று, பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று விசாரித்தார்.
புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க, அந்தந்த பிரிவு அலுவலர்களுக்கு மனுக்களை அனுப்பி வைத்தார். இதேபோல், விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம், விக்கிரவாண்டி கோட்டங்களில் அந்தந்த போலீஸ் நிலைய அலுவலர்கள், பொது மக்களிடம் மனுக்களை பெற்றனர். இந்த முகாமில் 150க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.