/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆயில் நிறுவனங்களில் மதுவிலக்கு போலீஸ் ஆய்வு
/
ஆயில் நிறுவனங்களில் மதுவிலக்கு போலீஸ் ஆய்வு
ADDED : ஜூன் 12, 2025 10:36 PM

விழுப்புரம்; விழுப்புரம் நகரில் உள்ள ஆயில் நிறுவனங்களில் எத்தனால், மெத்தனால் வேதிபொருட்கள் பயன்பாடு குறித்து மதுவிலக்கு போலீசார் ஆய்வு செய்தனர்.
மரக்காணம் கள்ளச்சாராயம் இறப்பு சம்பவத்தை தொடர்ந்து மதுவிலக்கு போலீசார் எத்தனால், மெத்தனால் பயன்பாடு குறித்து ஆயில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் அடிக்கடி ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி, விழுப்புரம் நகரில் உள்ள ஆயில் நிறுவனங்கள், கடைகளில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆயில் நிறுவனம் மற்றும் கடைகளில் உரிமம் இல்லாமல் எத்தனால் மற்றும் மெத்தனால் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா எனவும், அதன் கொள்முதல் விவரங்கள் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டனர்.