/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாலிபர் மீது தாக்குதல் போலீசார் விசாரணை
/
வாலிபர் மீது தாக்குதல் போலீசார் விசாரணை
ADDED : செப் 10, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே பைக்கில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்ட வாலிபரை தாக்கியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவெண்ணெய்நல் லுார் அடுத்த டி.கொளத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் மகா லிங்கம் மகன் துர்காராஜ், 23; இவர், தனது பைக்கில் வேகமாக சென்றுள்ளார்.
அதனை அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் திருநாவுக்கரசு, 19; ஏன் வேகமாக ஓட்டி செல்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த துர்காராஜ், திருநாவுக்கரசை தாக்கினார்.
புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.