/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக் மோதி பெண் பலி போலீஸ் விசாரணை
/
பைக் மோதி பெண் பலி போலீஸ் விசாரணை
ADDED : டிச 13, 2024 07:08 AM
மயிலம்: மயிலம் அருகே பைக் விபத்தில் இறந்த பெண் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மயிலம் அடுத்த கீழ்எடையாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் ரஞ்சித் குமார், 28; இவர் செங்கல்பட்டில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பினார். 11:30 மணியளவில் ஜக்காம்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே வந்த போது, சாலையை கடந்த பெண் மீது மோதினார்.
படுகாயமடைந்த அந்த பெண் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.
இறந்த பெண் யார் என்ற விபரம் தெரியவில்லை. 50 வயது மதிக்கத்தக்க அவர், குங்குமக் கலர் புடவையும், வெள்ளை ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். வலது கையில் பட்டாம்பூச்சி பச்சை குத்தப்பட்டிருந்தது. இந்த விபத்தில் பைக் ஓட்டி வந்த ரஞ்சித்குமாரும் காயமடைந்தார். அவர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்கப்பட்டார்.
மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து இறந்த பெண் யார் என விசாரித்து வருகின்றனர்.