/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏரியில் ஆண் பிணம் போலீசார் விசாரணை
/
ஏரியில் ஆண் பிணம் போலீசார் விசாரணை
ADDED : டிச 08, 2024 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : ஏரியில் மிதந்த ஆண் உடலை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.
அவலுார்பேட்டை அடுத்த நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்த மணி மகன் சேட்டு , 30; மனநலம் பாதிக்கப்பட்டவர்.இவர் கடந்த 1 ம்தேதி காலை நிலத்துக்கு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5;00, மணிக்கு அதே ஊரில் உள்ள ஏரியில் அவரது உடல் மிதந்தது கிடப்பது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவலுார்பேட்டை போலீசார் மணியின் உடலை மீட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.