/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகனுடன் பெண் மாயம் போலீஸ் விசாரணை
/
மகனுடன் பெண் மாயம் போலீஸ் விசாரணை
ADDED : ஜூலை 20, 2025 09:50 PM
விழுப்புரம் : மகனுடன் பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம், விராட்டிக்குப்பம் ரோட்டைச் சேர்ந்தவர் பாஸ்கர் மனைவி சுபாஷினி, 36; இவரது மகன் சிவப்பிரகாசம், 13; பாஸ்கரின் முதல் மனைவியின் மகன் தர்மராஜா, 24; கோயம்புத்துாரில் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.
கடந்த 17ம் தேதி, தர்மராஜாவிடம், சுபாஷினி தனது மகன் சிவப்பிரகாசத்தோடு கோவைக்கு வருவதாக கூறி, விழுப்புரம் புதிய பஸ் நிலையம் வந்தவர்கள் கோயம்புத்துார் செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தர்மராஜா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.