ADDED : மார் 24, 2025 04:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே காணாமல் போன முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கண்டமங்கலம் அடுத்த குயிலாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் 70: குடிப்பழக்கம் உடைய இவர் அடிக்கடி வீட்டில் இருந்து வெளியே சென்று, சில நாட்கள் கழித்து மீண்டும் வீட்டிற்கு வருவது வழக்கம். அதேபோல் கடந்த பிப்ரவரி 5ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது மகன் விஜயபாபு கொடுத்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.