ADDED : மார் 25, 2025 10:07 PM

விழுப்புரம் : முதியவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த பாணாம்பட்டைச் சேர்ந்தவர் நடேசன், 82; இவர், தனது மகன் சசிராஜா, 40; மற்றும் குடும்பத்துடன், கடந்த மாதம் திருப்பதிக்கு சென்றுள்ளனர்.
பிப்ரவரி 13ம் தேதி இரவு, மேல் திருப்பதியில் தங்கும் விடுதியில் தங்கியிருந்தபோது, நடேசனைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
திருமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பார்த்தபோது அவர் பஸ்சில் புறப்பட்டு கீழ் திருப்பதி சென்றது தெரிந்தது. இதன் பிறகு ஊருக்கு வந்திருப்பார் என கருதி, குடும்பத்தினர் விழுப்புரம் வந்து, தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இது குறித்து, சசிராஜா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.