ADDED : ஜூலை 17, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வீட்டில் இருந்து வெளியில் சென்ற முதியவர் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் எல்.ஆர்., பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 75; ஓய்வுபெற்ற ஊராட்சி டேங்க் ஆப்ரேட்டர். கடந்த 13ம் தேதி வீட்டில் இருந்து டீ குடிக்க வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.