ADDED : ஜன 19, 2024 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்,- விழுப்புரம் நகராட்சி பூங்கா அருகே அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் நகராட்சி பூங்கா அருகே அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை.
தகவலறிந்து சென்ற விழுப்புரம் டவுன் போலீசார், முதியவரின் உடலை கைப்பற்றி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், அவர் யார், எப்படி இறந்தார் என்பது குறித்தும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.