/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொங்கல் கவனிப்பு இல்லையே புலம்பி தள்ளும் போலீசார்
/
பொங்கல் கவனிப்பு இல்லையே புலம்பி தள்ளும் போலீசார்
ADDED : ஜன 21, 2025 06:49 AM
கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய போலீஸ் உட்கோட்டத்தில், 'கருப்பு தங்கம்' (கருங்கல்) குவாரிகள் நிறைந்த பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனின் அதிகாரியாக பணியாற்றும் வாய்ப்பு சுக்கிரன் உச்சியில் இருந்தால் மட்டுமே கிடைக்கும். அந்த அளவிற்கு போட்டா போட்டி இருக்கும்.
இந்த ஸ்டேஷனில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஸ்டேஷன் முன் மண் பானை வைத்து பொங்கலிட்டு வெகு விமர்சையாக கொண்டாடினர். இதற்காக, கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் உரிமையாளர்கள் பெரும் அன்பளிப்பு அளித்தனர்.
அதனை அதிகாரிகள் மட்டத்தில் பிரித்து கொண்டுவிட்டு, கீழே உள்ள போலீஸ்காரர்களுக்கு வேட்டி, சட்டை மட்டும் கொடுத்து அசமடைக்கி விட்டனர். பொங்கல் கவனிப்பு இல்லாததால், புலம்பி வரும் போலீசார், இதனை மாவட்ட அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்து வருகின்றனர்.

