/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காரை வீடியோ எடுத்தவர் மீது தாக்குதல் திண்டிவனம் கும்பலுக்கு போலீஸ் வலை
/
காரை வீடியோ எடுத்தவர் மீது தாக்குதல் திண்டிவனம் கும்பலுக்கு போலீஸ் வலை
காரை வீடியோ எடுத்தவர் மீது தாக்குதல் திண்டிவனம் கும்பலுக்கு போலீஸ் வலை
காரை வீடியோ எடுத்தவர் மீது தாக்குதல் திண்டிவனம் கும்பலுக்கு போலீஸ் வலை
ADDED : மே 28, 2025 11:53 PM
வானுார்: வானுார் அருகே நள்ளிரவில் சாலையோரம் நின்றிருந்த காரை வீடியோ எடுத்த இரு வாலிபர்களை தாக்கிய திண்டிவனம் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
வானுார் அடுத்த இரும்பை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வடிவேல் மகன் ராஜவேல், 29; முதலியார்சாவடியில் கெஸ்ட் அவுஸ் நடத்தி வருகிறார். இவர் கடந்த 25ம் தேதி நள்ளிரவு தனது நண்பர் நாகராஜை, தனது பைக்கில் அழைத்துக்கொண்டு வீடு திரும்பினார்.
திண்டிவனம்-புதுச்சேரி சாலையில், இடையஞ்சாவடி குதிரைப்பண்ணை வளைவு சந்திப்பில் பைக் சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த காரில் இருந்த நபர் சைகை காண்பித்து பைக்கை நிறுத்தினர்.
காரில் தன்னுடன் வந்த நபர் வாந்தி எடுப்பதாகவும், தண்ணீர் இருந்தால் கொடுங்கள் என கேட்டனர். சந்தேகமடைந்த ராஜவேல், தனது மொபைல்போன் மூலம் காரை வீடியோ எடுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த காரில் இருந்த நபர்கள், ராஜவேல், நாகராஜ் ஆகிய இருவரையும் சராமரியாக தாக்கினர். வலி தாங்க முடியாமல் இருவரும் பைக்கை சாலையில் போட்டுவிட்டு தப்பித்து சென்றனர். காரில் வந்த நபர்கள் பைக்கை எடுத்து கொண்டு சென்றனர். ராஜவேல், ஆரோவில் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது, காரில் வந்த நபர்கள், திண்டிவனம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த அஜித்குமார் மற்றும் சிலர் என்பது தெரிய வந்தது. திண்டிவனம் சென்ற போலீசார், ராஜவேலு பைக்கை மீட்டு வந்தனர். வழக்கில் தலைமறைவாக உள்ள அஜித்குமார், அவருடன் வந்த பட்டறை மணி உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்.