/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு போலீஸ் வலை
/
சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு போலீஸ் வலை
ADDED : மார் 19, 2025 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோட்டக்குப்பம் : கிளியனுார் அருகே சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், கிளியனுார் அடுத்த தென்கோடிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் அர்ஜூன், 22; இவர் 17 வயது சிறுமியை காதலித்து கடத்திச் சென்று, வானுார் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு விரிவாக்க அலுவலர் வீரமணி, கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில், குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அர்ஜூனை போலீசார் தேடி வருகின்றனர்.