ADDED : ஏப் 21, 2026 11:09 PM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் நகரில் உள்ள லாட்ஜ்களில் வெளி மாவட்ட நபர்கள் தங்கியுள்ளனரா என போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் நாளை 23ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 6:00 மணியுடன் நிறைவடைந்தது. இதனால், தேர்தல் பணிக்காக வெளி மாவட்டங்களில் இருந்து வந்த நபர்கள், அந்த மாவட்டத்தில் இருந்து வெளியேற தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
இதையடுத்து, நேற்றிரவு விழுப்புரம் நகரில் உள்ள தனியார் லாட்ஜ்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தேர்தலுக்காக வெளி மாவட்டங்களில் இருந்து வந்த நபர்கள் தங்கியுள்ளனரா என சோதனை செய்தனர்.
