/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நெடுஞ்சாலையில் பழைய ரோந்து வாகனங்களை 'உருட்டும்' போலீசார்
/
நெடுஞ்சாலையில் பழைய ரோந்து வாகனங்களை 'உருட்டும்' போலீசார்
நெடுஞ்சாலையில் பழைய ரோந்து வாகனங்களை 'உருட்டும்' போலீசார்
நெடுஞ்சாலையில் பழைய ரோந்து வாகனங்களை 'உருட்டும்' போலீசார்
ADDED : நவ 25, 2024 11:32 PM
விழுப்புரம் மாவட்டத்தின் வழியாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை, திண்டிவனம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை, புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, சென்னை இ.சி.ஆர்., தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளது.
இது மட்டுமின்றி திருக்கோவிலூர், திருவண்ணாமலை, ஆரணி, மரக்காணம், மயிலம் போன்ற பகுதிகளுக்கான மாநில நெடுஞ்சாலைகளும் அமைந்துள்ளன. இந்த சாலைகளில் செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
இந்த பகுதிகளில் விபத்தில் சிக்கும் வாகனங்களை துரிதமாக மீட்கும் பணிகள் மேற்கொள்ளவும், நெடுஞ்சாலை ரோந்து பிரிவு வாகனங்கள் உள்ளது.
குறிப்பாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஓங்கூரில் இருந்து ஜக்காம்பேட்டை வரையிலும், அங்கிருந்து முண்டியம்பாக்கம் வரையும், அங்கிருந்து மாவட்ட எல்லையான சித்தானங்கூர் எல்லை வரையிலும் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் இயங்குகின்றன.
இதே போன்று திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் பட்டானூர் வரையும், கோட்டக்குப்பத்தில் இருந்து ரங்கநாதபுரம் வரை என அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் சேர்த்து மொத்தம் 10 போலீஸ் ரோந்து வாகனங்கள் இயக்கப்படுகிறது.
முக்கிய சாலைகளில் நடக்கும் விபத்துக்களை உடனுக்குடன் மீட்பு பணியில் ஈடுப்படுவதற்கு ரோந்து வாகனம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஷிப்டிலும் இரு போலீசார் பணியில் இருப்பர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட இந்த ரோந்து வாகனங்கள் தற்போது, பழுதடைந்து விட்டது.
இதனால் சாலையில் விபத்துக்கள் நடக்கும் இடங்களுக்கு உடனடியாக போலீசாரால் செல்ல முடியவில்லை.
விபத்து சம்பவம் நடக்கும் பகுதிகளுக்கு ஆமை வேகத்தில் செல்வதற்குள், பொது மக்களே அடிப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் சூழல் உள்ளது.