/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காவல்துறை வீரவணக்க நாள்; எஸ்.பி., தலைமையில் அஞ்சலி
/
காவல்துறை வீரவணக்க நாள்; எஸ்.பி., தலைமையில் அஞ்சலி
காவல்துறை வீரவணக்க நாள்; எஸ்.பி., தலைமையில் அஞ்சலி
காவல்துறை வீரவணக்க நாள்; எஸ்.பி., தலைமையில் அஞ்சலி
ADDED : அக் 21, 2024 10:54 PM

விழுப்புரம் : விழுப்புரத்தில் காவலர் வீரவணக்க நாளையொட்டி, உயிர்நீத்த காவலர்கள் நினைவாக, எஸ்.பி., தலைமையில் அஞ்சலி செலுத்தினர்.
நாடு முழுவதும், அக்.21ஆம் தேதி, காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 1959ம் ஆண்டு அக்.21ம் தேதி லடாக் பகுதியில், சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில், மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.
பல ஆயிரம் அடி உயர மலைப் பகுதியில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் இந்த வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்தாண்டு, தமிழகத்தில் 5 காவலர் உள்ளிட்ட 213 பேர் வீர மரணம் அடைந்துள்ளதால், அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில், நேற்று வீரவணக்க நாளில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
விழுப்புரம் காகுப்பம், காவல்துறை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள நினைவிடத்தில் காலை 7:45 மணிக்கு வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. விழுப்புரம் எஸ்.பி., தீபக்சிவாச் தலைமையில், ஏ.டி.எஸ்.பி.,க்கள் திருமால், தினகரன், ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார்குப்தா, டி.எஸ்.பி.,க்கள் பிரகாஷ், நந்தகுமார், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரேவதி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் அமர்நாத், ஊர்க்காவல் படை கமாண்டர் நத்தர்ஷா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க, மறைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.