/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா எஸ்.பி.,தலைமையில் போலீஸ் பாதுகாப்பு
/
சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா எஸ்.பி.,தலைமையில் போலீஸ் பாதுகாப்பு
சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா எஸ்.பி.,தலைமையில் போலீஸ் பாதுகாப்பு
சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா எஸ்.பி.,தலைமையில் போலீஸ் பாதுகாப்பு
ADDED : மே 11, 2025 11:50 PM

திண்டிவனம்: மாமல்லபுரத்தில் நடந்த வன்னிய இளைஞர் பெருவிழாவையொட்டி, விழுப்புரம் எஸ்.பி.,தலைமையில் திண்டிவனத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா, மாமல்லபுரத்திலுள்ள திருவிடந்தையில் நேற்று மாலை நடந்தது.
மாநாட்டிற்கு செல்லும் போது எந்த பிரச்னையும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கையாக மாமல்லபுரத்திற்கு செல்லும் பா.ம.க.,மற்றும் வன்னியர் சங்கத்தின் வாகனங்கள் புதுச்சேரியிலிருந்து இ.சி.ஆர் வழியாக செல்வதற்கு முற்றிலும் போலீசாரால் தடை விதிக்கப்பட்டது.
மேலும், அசாம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், புதுச்சேரி மாநிலம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் முழுதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுவிலக்கு விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டது.
மாநாட்டிற்காக நேற்று பிற்பகல் 12 மணியிலிருந்து அதிக அளவில் வாகனங்கள் புதுச்சேரி ,கடலுார், விழுப்புரம், திருச்சி, சேலம், திண்டிவனம்,செஞ்சி, திருவமண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து திண்டிவனம்-சென்னை சாலையில் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாமல்லபுரம் மாநாட்டிற்கு திண்டிவனம் வழியாக செல்லும் வாகனங்கள், மாவட்ட எல்லையான ஓங்கூர் டோல்கேட் வழியை கடந்து செல்ல வேண்டும்.
டோல்கேட்டில் பா.ம.க.,மற்றும் வன்னியர் சங்க கொடியுடன் சென்ற அனைத்து வாகனங்களும் டோல்கேட் கட்டணமின்றி செல்வதற்காக டோல்கேட்டின் அனைத்து லேன்களும் திறந்துவிடப்பட்டன. இதனால் மாநாட்டிற்கு செல்லும் வாகனங்கள் எல்லாம் தடையில்லாமல் டோல்கேட்டை கடந்து சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை.
மாமல்லபுரம் மாநாட்டிற்காக திண்டிவனத்தில் விழுப்புரம் எஸ்.பி., சரவணன் தலைமையில் டவுன் டி.எஸ்.பி.,பிரகாஷ் மேற்பார்வையில் அதி விரைவுப்படை மற்றும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.