/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அம்பேத்கர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு
/
அம்பேத்கர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு
ADDED : மார் 15, 2024 12:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், 75 இடங்களில் அம்பேத்கர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
அம்பேத்கர் சிலைகள் தகர்க்கப்படும் என தீவிரவாத அச்சுறுத்தியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு நேற்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் 75 இடங்களில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு நேற்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
சிலை சேதம், அவமதிப்பு போன்றவைகளில் இருந்து தடுக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவக்கப்பட்டது.

