/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி பெண் சப் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு

ADDED : அக் 05, 2024 04:14 AM

விழுப்புரம், : தமிழக காவல்துறை சார்பில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில், வென்ற சப் இன்ஸ்பெக்டர் மற்றும் முதல்நிலைக் காவலரை எஸ்.பி., பாராட்டினார்.
தமிழக காவல்துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில், மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது.
வடக்கு மண்டல காவல் துறை சார்பில், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து, திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சுதா, செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் அமலோடெல்பின் சுதா பங்கேற்றனர்.
இதில், சப் இன்ஸ்பெக்டர் சுதா, 3 பிரிவுகளில் முதலிடம் பெற்று தங்கம் வென்றார். அதிக புள்ளிகள் பெற்ற அமலோடெல்பின் சுதாவிற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நேற்று விழுப்புரம் வந்த இருவரையும், விழுப்புரம் எஸ்.பி., தீபக் சிவாச் நேரில் அழைத்து பாராட்டினார்.