/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குவாரியில் தலையில்லாமல் கிடந்த சடலம்; துப்பு கிடைக்காமல் போலீசார் திணறல்

ADDED : நவ 26, 2024 07:08 AM

வானூர்; வானூர் அருகே கல்குவாரியில் தலையில்லாத ஆண் உடல் கிடந்த வழக்கில், துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த திருவக்கரை பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான கல்குவாரி தண்ணீரில் கடந்த 23ம் தேதி தலை, கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில், உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்டது. உடலை வானூர் போலீசார் கைப்பற்றி, தடயங்களை சேகரித்தனர். தலை துண்டிக்கப்பட்டு இருந்ததால், கொலை செய்யப்பட்ட நபர் யார் என்பதை போலீசாரார் கண்டறிய முடியவில்லை.
கொலை செய்யப்பட்டவரின் மார்பில் கஸ்தூரி என பெயர் பச்சை குத்தப்பட்டுள்ளதை வைத்து, வெளி மாவட்டங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவக்கரை மெயின் ரோட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், உடல் கண்டெடுக்கப்பட்ட கல்குவாரி தண்ணீரில், நேற்று காலை வானூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் இறங்கி, தலை, கை, கால்கள் இருக்கிறதா என தேடினர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. சம்பவம் நடந்து மூன்று நாட்களாகியும் கொலை செய்யப்பட்டவர் யார் என கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.