/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மதுவிலக்கு வழக்கு குற்றவாளிகள் மீது நடவடிக்கை போலீசார் அதிரடி
/
மதுவிலக்கு வழக்கு குற்றவாளிகள் மீது நடவடிக்கை போலீசார் அதிரடி
மதுவிலக்கு வழக்கு குற்றவாளிகள் மீது நடவடிக்கை போலீசார் அதிரடி
மதுவிலக்கு வழக்கு குற்றவாளிகள் மீது நடவடிக்கை போலீசார் அதிரடி
ADDED : ஆக 20, 2025 10:59 PM
விழுப்புரம், ; மதுவிலக்கு வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 106 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக, வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக் குறிப்பு:
வடக்கு மண்டலத்திற்குட்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை மற்றும் சட்ட விரோத மதுபான விற்பனை, பிற மாநில மதுபான விற்பனை உள்ளிட்ட மதுவிலக்கு குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2024,ம் ஆண்டு ஜூலை முதல் தேதியில் இருந்து கடந்த ஜூலை, 31ம் தேதி வரை மாவட்டத்தில், 642 பேர் மீது நன்னடத்தைக்கான பிணை பத்திரம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்ட விரோத மதுபான விற்பனை மற்றும் அனுமதிக்கப்படாத இடங்களில் மதுபானம் அருந்த அனுமதித்த குற்றங்களில் 1,151 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். கள்ளச்சாராய வழக்குகளில் 3,171 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுவிலக்கு வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள், 106 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
மேலும், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடும் முக்கிய குற்றவாளிகளின் அசையும், அசையா சொத்துக்களை முடக்குவதற்கும், கையகப்படுத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

