/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
/
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
ADDED : அக் 06, 2025 02:07 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் பயணிகள் நிழற்குடையில், போலீசார் விழிப்புணர்வு பேனர் ஒட்டினர்.
விழுப்புரம் நகராட்சி நான்குமுனை சிக்னல் மற்றும் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள பயணிகள் நிழற்குடைகளில் அரசியல் கட்சியினர் போட்டி போட்டு டிஜிட்டல் பேனர் வைத்து வந்தனர். இதனால், அரசியல் கட்சியினரிடையே தகராறு ஏற்பட்டு சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது.
இதையடுத்து, புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள பயணிகள் நிழற்குடையில் காவல்துறையினர் சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பேனரை ஒட்டினர்.
இதை தொடர்ந்து, நான்குமுனை சிக்னல் அரசு தலைமை மருத்துவமனை எதிரில் உள்ள பயணிகள் நிழற்குடையில் நேற்று காவல் துறையினர் விழிப்புணர்வு பேனர் ஒட்டினர்.