/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போலீஸ், வியாபாரிகள் ஆலோசனை கூட்டம்
/
போலீஸ், வியாபாரிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 22, 2025 03:54 AM

வானுார்: திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக ஆரோவில் போலீசார் மற்றும் வியாபாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட திண்டிவனம் மெயின் ரோடு, மயிலம் மற்றும் இரும்பை சாலைகளில் அதிகளவில் ஜவுளி கடைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள் உள்ளன. இப்பகுதியில் ஒரு சில கடைகளில் மட்டுமே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தற்போது, அனைத்து பகுதிகளிலும் கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கும்படி எஸ்.பி., சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
இதையொட்டி, திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட மெயின் ரோடு பகுதிகளில் உள்ள கடை வியாபாரிகளுடன், ஆரோவில் போலீசார் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
அதில், பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கண்காணிப்பு கேமரா இல்லாததால் திருடர்களுக்கு சாதகமாகி விடுகிறது. அதை தடுக்க அனைத்து கடைகளிலும் கேமரா பொருத்த முன்வர வேண்டும்.
அப்போது தான் குற்ற சம்பவங்களைத் தடுக்க முடியும் என போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், ஆரோவில் இன்ஸ்பெக்டர் கமலஹாசன், சப் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், சுந்தரமூர்த்தி, ஊராட்சி தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.