ADDED : ஏப் 14, 2025 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் போலீஸ்காரரின் பைக்கை மர்ம நபர் திருடி சென்றார்.
விழுப்புரம் அருகே காவணிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி மகன் கலையரசன், 35; சென்னை சி.பி.சி.ஐ.டி., பிரிவில் போலீஸ். கடந்த 7ம் தேதி தனது மோட்டார் சைக்கிள் விழுப்புரம் ரயில் நிலையம் வளாக ஆர்.எம்.எஸ்., தபால் நிலையம் எதிரில் சென்னைக்கு சென்றார்.
மறுநாள் வந்து பார்த்த போது பைக் திருடப்பட்டு இருந்தது. விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

