ADDED : மார் 05, 2024 05:22 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது.
சங்க தலைவர் கன்யா ரமேஷ் தலைமையில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் முன்னாள் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், பாலகுருநாதன்,செயலாளர் அன்பழகன், பொருளாளர் சுரேஷ்குமரன், முன்னாள் துணை ஆளுநர்கள் சதிஷ், சரவணகுமார், நிர்வாகிகள் காங்கேயன், காசி விஸ்வநாதன், நம்மாழ்வார், ஸ்ரீதர், சுகுமாறன், துரைராஜ், குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.
