ADDED : ஜூன் 29, 2026 03:15 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் நகரில் விராட்டிக்குப்பம் பகுதியில் போலியோ சொட்டு மருந்து முகாம் துவங்கியது.
விழுப்புரம் நகரில் 1வது வார்டுக்கு உட்பட்ட விராட்டிக்குப்பம் பாதையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமை, த.வெ.க., தெற்கு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.
மேற்கு நகர செயலாளர் சேரமான் பாண்டியன், நகர பொருளாளர் ஸ்ரீதர், தெற்கு நகர தொண்டரணி அமைப்பாளர் அரி, நிர்வாகி மணிபாலன், ஆனந்த் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
