ADDED : ஜூன் 29, 2026 03:29 AM

அ நிறம் | அளவு
கண்டமங்கலம்: கண்டமங்கலம் ஒன்றியத்தில் 123 மையங்களில் சொட்டு மருந்து போடும் முகாம் நடந்தது.
திருமங்கலம் ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு சேர்மன் வாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். வட்டார மருத்துவ அலுவலர் ஆர்த்தி முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் மதியழகன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் செவிலியர்கள், அலுவலர்கள் ஊழியர்கள், தி.மு.க., கிளைச் செயலாளர் ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதேபோல் கண்டமங்கலம் ஒன்றியத்தில் 123 மையங்களில் நடந்த முகாமில், மருத்துவர்கள் செவிலியர்கள், பகுதி மற்றும் கிராமப்புற செவிலியர்கள் ஊழியர்கள் உட்பட 442 பேர் சொட்டு மருந்து போடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று 9,645 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது.
