/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓட்டுசாவடிகள்: தாசில்தார் ஆய்வு
/
ஓட்டுசாவடிகள்: தாசில்தார் ஆய்வு
ADDED : ஜூன் 15, 2025 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் வாக்காளர்கள் அதிகம் உள்ள ஓட்டுசாவடிகளை பிரித்து புதிய மையம் அமைப்பது தொடர்பாக தாசில்தார் ஆய்வு செய்தார்.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில், 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுசாவடிகளை பிரித்து தனியாக ஓட்டுசாவடி அமைக்க தேர்தல் ஆணையம் உத்திரவிட்டுள்ளது.
அதன்படி விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இயங்கும், எண்.229, 236 ஆகிய இரு ஓட்டுசாவடிகளில் அதிகமாக உள்ள வாக்காளர்களை பிரித்து புதிய ஓட்டுச்சாவடி மையம் அமைக்க தாசில்தார் செல்வமூர்த்தி ஆய்வு செய்தார்.
தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன், வி.ஏ.ஓ.,க்கள் ராஜா, ஜெயகாந்தன், கிராம உதவியாளர் செந்தில்குமார் உடனிருந்தனர்.