/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு சட்டக்கல்லுாரியில் பொங்கல் விழா
/
அரசு சட்டக்கல்லுாரியில் பொங்கல் விழா
ADDED : ஜன 13, 2025 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் மாணவர்கள் சார்பில் பொங்கல் விழா நடந்தது.
விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் தைப்பொங்கல் விழா மற்றும் போட்டிகள் நடந்தது. கல்லூரி முதல்வர் கிருஷ்ணலீலா தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
உதவி பேராசிரியர்கள் ராமலிங்கம், ஜெனிபர், மும்தாஸ் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர். மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, செங்கரும்புடன் பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து, தமிழர் விளையாட்டுகளில் கலந்துகொண்டு, கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.