/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் பொங்கல் விழா கலெக்டர் உறியடித்து உற்சாகம்
/
விழுப்புரத்தில் பொங்கல் விழா கலெக்டர் உறியடித்து உற்சாகம்
விழுப்புரத்தில் பொங்கல் விழா கலெக்டர் உறியடித்து உற்சாகம்
விழுப்புரத்தில் பொங்கல் விழா கலெக்டர் உறியடித்து உற்சாகம்
ADDED : ஜன 14, 2026 06:07 AM

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அரசு துறை பணியாளர்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நேற்று மாலை நடந்தது.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஷேக்அப்துல்ரஹ்மான், கூடுதல் கலெக்டர் பத்மஜா ஆகியோர், பானையில் பொங்கல் வைத்து விழாவை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து உறியடி நிகழ்ச்சியும், கயிறு இழுத்தல் போட்டிகளும் நடந்தது. கலெக்டர் உறியடித்தும், கயிறு இழுத்தும் உற்சாகப்படுத்தினார்.
இசை நாற்காலி, கரும்பு கட்டு உடைத்தல், இளவட்டக்கல் துாக்குதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடந்தது. கலெக்டர் அலுவலக துறை அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
விழாவில் கலெக்டர் பேசுகையில், 'கிராமப்புறங்கள் நிறைந்த விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து தரப்பு மக்களும், பொங்கல் விழாவில் கலந்துகொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும் பாராட்டுக்குறியது' என்றார்.
டி.ஆர்.ஓ., அரிதாஸ், உதவி கலெக்டர் (பயிற்சி) வெங்கடேஸ்வரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பார்கவி உட்பட பலர் பங்கேற்றனர்.

