ADDED : ஜன 12, 2024 12:10 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை பயனாளிகளுக்கு எம்.எல்.ஏ., வழங்கினர்.
ராதாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பரிசு தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கி பேசினார்.
ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, பி.டி.ஓ.,க்கள் சுமதி, முபாரக் அலி பேக், மாவட்ட துணைப் பதிவாளர் அழகப்பன், திட்ட அலுவலர் நாராயணசாமி முன்னிலை வகித்தனர். வங்கி செயலாளர் ஷர்மிளா வரவேற்றார்.
சமூக நல தனி தாசில்தார் ரகுராமன், வட்ட வழங்கல் அலுவலர் விமல் ராஜ், வருவாய் ஆய்வாளர்கள் தயாநிதி, வினோத், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, ஜெயபால், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
திருவாமாத்துார் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி சார்பில் தென்னமாதேவி ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கி பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி பேசினார். வங்கி செயலாளர் ஜீவானந்தம் வரவேற்றார்.
ஒன்றிய கவுன்சிலர் சிட்டிபாபு, ஊராட்சி தலைவர் ரோஜா ரமணி ரமேஷ், துணைத் தலைவர் திருமகள் செல்வி மோகன், கிளைச் செயலாளர் மூர்த்தி, சிவபாலன், சங்கர், ராஜசேகர், கோவிந்தராஜ், முத்து, சூர்யா உட்பட பலர் பங்கேற்றனர்.
திண்டிவனம்
ஒலக்கூர் அடுத்த சாரம் கிராமத்தில் அமைச்சர் மஸ்தான் பொங்கள் பரிசு தொகுப்பை வழங்கினார். ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், துணைச் சேர்மன் ராஜாராம், பி.டி.ஓ.,க்கள் நாராயணன், தேவதாஸ், தாசில்தார் சிவா, சாரம் ஊராட்சி தலைவர் வனஜா ராஜ்குமார், மாவட்ட கவுன்சிலர் ஏழிலரசி ஏழுமலை, ஒன்றிய கவுன்சிலர் ஜெகதீஸ்வரி பங்கேற்றனர்.
அவலுார்பேட்டை
வளத்தி அடுத்த கன்னலம் கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை துறை துணை ஆட்சியர் முகுந்தன், ஒன்றிய சேர்மன் கண்மணி ஆகியோர் பரிசு தொகுப்பு வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தனர். தாசில்தார் முகமதுஅலி, வட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், சியாமளா ஜெய்சங்கர், ஊராட்சி தலைவர் தமிழரசிபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழுப்புரம்
விழுப்புரம் நகராட்சி 1வது வார்டு, விராட்டிக்குப்பம் பாதையில் உள்ள ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சிக்கு, கவுன்சிலர் கோல்டு சேகர் தலைமை தாங்கி, பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார்.
வார்டு செயலாளர் கின்னஸ், தகவல் தொழில்நுட்ப பிரிவு முருகன், சுரேஷ்குமார், கார்த்திக், சரவணன், ராமு உட்பட பலர் பங்கேற்றனர்.