/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிகா கல்லுாரியில் பொங்கல் நிகழ்ச்சி
/
சிகா கல்லுாரியில் பொங்கல் நிகழ்ச்சி
ADDED : ஜன 12, 2025 10:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரம் அருகே கப்பியாம்புலியூரில் உள்ள சிகா மேலாண்மை மற்றும் கணினி அறிவியல் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரி முதல்வர் ராஜரத்தினம் தலைமை தாங்கினார். தாளாளர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார்.
விசாலாட்சி பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளை வாழ்த்தி பேசினார்.
தொடர்ந்து, மாணவ, மாணவிகள் அவரவர்களின் தனித்திறமைகளை நாட்டுப்புற கலைகள் மூலம் வெளிப்படுத்தினர். விழாவில், அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.