/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகளிர் கல்லுாரியில் பொங்கல் நிகழ்ச்சி
/
மகளிர் கல்லுாரியில் பொங்கல் நிகழ்ச்சி
ADDED : ஜன 12, 2025 10:20 PM

விழுப்புரம்; விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரி முதல்வர் அகிலா தலைமை தாங்கினார். கலைமாமணி சிவகாசி சசிகலா , பொங்கல் விழாவின் முக்கியத்துவம், பெண்களின் சிறப்புகள், தமிழ் மொழி பெருமைகள், குறித்து அறிவுரைகளை வழங்கினார்.
தொடர்ந்து, ஆசிரியர்களுக்கு பல்வேறு விளையாட்டுகள் நடைபெற்றது. மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், மல்லர் கம்பம், சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுகள் நடைபெற்றது. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவையொட்டி உணவு கடைகள், சிற்றுண்டி நிலையம், ஆடை அலங்காரம் உள்ளிட்ட அங்காடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில், கல்லுாரி பேராசிரியைகள், மாணவிகள் மற்றும் கல்லுாரி நிர்வாகிகள், அலுவலக ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.