ADDED : ஆக 27, 2025 03:09 AM
விழுப்புரம்:முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு, செப்., 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா, பூத்துறை அரசு செம்மண் குவாரியில் விதிகளை மீறி செம்மண் எடுத்து அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாதன் ஆகியோர் மீது, கடந்த, 2012 மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்தனர்.
இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சதானந்தம், கோபிநாதன் ஆஜராகினர். பொன்முடி, கவுதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், கோதகுமார் ஆஜராகவில்லை.
இதையடுத்து, வழக்கு விசாரணையை செப்., 9ம் தேதிக்கு ஒத்திவைத்து, மாவட்ட நீதிபதி மணிமொழி உத்தரவிட்டார்.