ADDED : ஆக 14, 2025 01:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த தேசிய கொடி விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில், சுதந்திர தினம் கொண்டாடுவதை முன்னிட்டும், பொதுமக்களுக்கு சுதந்திர தினம் மற்றும் தேசிய கொடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அஞ்சல் துறை சார்பில் தேசிய கொடி ஊர்வலம் நடத்தப்பட்டது. விழுப்புரம் தலைமை அஞ்சலக அதிகாரி சாதிக்பாஷா தலைமையில், அலுவலர்கள், ஊழியர்கள் முக்கிய வீதிகளின் வழியாக தேசிய கொடியுடன் ஊர்வலமாக சென்றனர்.
இதில், சுதந்திர தினத்தன்று வீட்டுக்கு வீடு தேசிய கொடியேற்றுவோம்; சுதந்திரத்திற்கு போராடிய தியாகிகளை போற்றுவோம்; என வலியுறுத்தி, தேசிய கொடி, அஞ்சலகங்களின் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.