/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவங்கியது
/
பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவங்கியது
பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவங்கியது
பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவங்கியது
ADDED : பிப் 10, 2026 04:23 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு 163 மையங்களில் செய்முறை தேர்வு நேற்று துவங்கியது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 194 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு 163 மையங்களில் செய்முறை தேர்வு நடந்தது. இதில், 18 ஆயிரத்து 33 மாணவர்கள் பங்கேற்றனர்.
விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வை சி.இ.ஓ., அறிவழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், தேர்வு கண்காணிப்பு பணியில் ஆசிரியர்கள், தொழிற்கல்வி மற்றும் கணினி பயிற்றுனர்கள், 500 பேரும், புறத்தேர்வர்கள் 250 பேரும் ஈடுபட்டனர்.
மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களில், விழுப்புரம், திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.