/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆதிவாலீஸ்வரர் கோவிலில் நந்திக்கு பிரதோஷ பூஜை
/
ஆதிவாலீஸ்வரர் கோவிலில் நந்திக்கு பிரதோஷ பூஜை
ADDED : பிப் 16, 2026 06:43 AM

விழுப்புரம்: விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஆதிவாலீஸ்வரர் கோவிலில் சனிபிரதோஷ பூஜை நடந்தது.
அதனையொட்டி, மூலவருக்கும் நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
தொடர்ந்து 5:00 மணிக்கு பிரதோஷ நாயகர் நந்தி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 5:30 மணிக்கு சுவாமிக்கும், மூலவருக்கும் சிறப்பு தீபாராதனை, 6:00 மணிக்கு சுவாமி உட்பிரகார வீதியுலா நடந்தது.
மயிலம் கொல்லியங்குணம் நீலகண்டேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கோவில் வளாகத்தில் உள்ள நந்திக்கு நடந்த மகா தீபாராதனை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதே போன்று பெரும்பாக்கம், நெடி, தென்பசியார் பாதிராப்புலியூர், செண்டூர், ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

