
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஆதிவாலீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி, நேற்று மாலை 4:00 மணிக்கு, நந்தி பகவா னுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து மூலவருக்கும் அபிேஷகம் செய்யப்பட்டது.
பின், நந்தீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை 5:30 மணிக்கு, நந்தி பகவான் கோவில் உட்பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி வெங்கடேசன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.