/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் கோவிலில்களில் பிரதோஷ வழிபாடு
/
மயிலம் கோவிலில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED : ஆக 21, 2025 09:13 PM
மயிலம்; மயிலம் பகுதி கோவில்களில் பிரதோஷ வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செண்டூர் கிராமத்தில் உள்ள பிரம்மராம்பிகை உடனுறை மல்லிகார்ஜினேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் பிரதோஷத்தையொட்டி, மாலை 6:00 மணிக்கு மூலவருக்கு பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கோவில் வளாகத்தில் நந்திக்கு நடந்த மகா தீபாராதனை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். இது போன்று மயிலம் சுந்தர விநாயகர், தென்பசியார், பெரும்பாக்கம், நெடி, பாதிராப்புலியூர், ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு வழிபாடு நடந்தது.