/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு
/
பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு
பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு
பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு
ADDED : ஆக 07, 2025 11:27 PM
விழுப்புரம்: மாவட்டத்தில், போதைப்பொருள் இல்லாத தமிழகம் பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு, ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். 'போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு' எனும் உயர்ந்த இலக்கினை அடையும் நோக்கில், போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக, வரும் 11ம் தேதி பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்வின் போதே மாவட்டத்தில், விழுப்புரம் அரசு சட்ட கல்லுாரியிலும், அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் கூடுமிடங்களிலும், போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பர்.
இந்த நிகழ்வை மக்கள் இணையதளம் வாயிலாக பார்க்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உறுதிமொழி ஏற்பவர்களுக்கு இணையம் வாயிலாகவே சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்ய, இந்த கூட்டத்தில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூடுதல் எஸ்.பி., முருகன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர் .