/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளி மாணவிக்கு அரசு விருது வழங்கல்
/
பள்ளி மாணவிக்கு அரசு விருது வழங்கல்
ADDED : பிப் 21, 2024 10:31 PM

விழுப்புரம் : விழுப்புரம், பூந்தோட்டம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு அரசு விருது வழங்கப்பட்டது.
தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை மூலம் விருது வழங்கும் விழா விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
இதில், இந்தாண்டிற்கான ஓவியக் கலைக்கான கலை இளமணி விருது பூந்தோட்டம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி தேஜாஸ்ரீக்கு வழங்கப்பட்டது.
இந்த விருதை, கலெக்டர் பழனி, மாணவி தேஜாஸ்ரீக்கு வழங்கினார். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ் ஜெய்நாராயணன், கலை பண்பாட்டு துறை உதவி இயக்குநர் செந்தில்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உட்பட மாணவர்கள் பலரும், மாணவி தேஜாஸ்ரீயை பாராட்டினர்.