sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அடிப்படை தேவை அனைத்தையும் நிறைவேற்றி தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாற்றுவேன் தலைவர் விசாலாட்சி வேலு உறுதி

/

அடிப்படை தேவை அனைத்தையும் நிறைவேற்றி தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாற்றுவேன் தலைவர் விசாலாட்சி வேலு உறுதி

அடிப்படை தேவை அனைத்தையும் நிறைவேற்றி தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாற்றுவேன் தலைவர் விசாலாட்சி வேலு உறுதி

அடிப்படை தேவை அனைத்தையும் நிறைவேற்றி தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாற்றுவேன் தலைவர் விசாலாட்சி வேலு உறுதி


ADDED : பிப் 15, 2024 11:30 PM

Google News

ADDED : பிப் 15, 2024 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னங்குப்பம் ஊராட்சியில் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றி தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாற்றுவேன் என ஊராட்சி தலைவர் விசாலாட்சி வேலு உறுதி அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் ஊராட்சியில், முன்னாள் அமைச்சர் பொன்முடி, புகழேந்தி எம்.எல்.ஏ., ஆகியோரின் பரிந்துரையில் பேரில் தொடக்கப் பள்ளியில் 28 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 2 மற்றும் மேல்நிலைப் பள்ளியில் 3 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், 12 லட்சம் ரூபாய் மதிப்பில் ரேஷன் கடை கட்டடம்.

20 லட்சம் ரூபாயில் 60 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, புதிய போர் வெல், பைப் லைன், 8 லட்சம் ரூபாய் மதிப்பிலும், அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஊனமுற்றோர் கழிவறை கட்டடம்.

5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பெண்கள் கழிவறை கட்டிடம், 4 லட்சம் ரூபாயில் மழை நீர் வடிகால் வாய்க்கால். அண்ணா நகரில் 8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சிமென்ட் சாலை வசதி.

இருளர் குடியிருப்பு காலனி பகுதியில் புதியதாக சாலை வசதி. தொடக்கப்பள்ளியில் பழைய 2 வகுப்பறை கட்டடங்கள் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

பழைய குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை புதுப்பித்தும் கொடுத்துள்ளேன்.

திரவுபதி அம்மன் கோவில் தெருவில் புதிய சிமென்ட் சாலை, பெருமாள் கவுண்டர் தெரு, முருகன் கோவில் பின்புறம் உள்ள தெரு, பஸ் நிலையத்திலிருந்து முருகன் கோவில் வர மற்றும் புட்டான் தெருவிலும் புதிய தார் சாலைப் பணியும் நடைபெற உள்ளது.

வரும் காலங்களில் பொன்னங்குப்பத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசிடமிருந்து கேட்டுப் பெற்று இந்த ஊராட்சியை தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாற்றிக் காட்டுவேன்.

இவ்வாறு ஊராட்சி தலைவர் விசாலாட்சி வேலு கூறினார்.






      Dinamalar
      Follow us