/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முன்விரோத தகராறு: மூவர் மீது வழக்கு
/
முன்விரோத தகராறு: மூவர் மீது வழக்கு
ADDED : ஜூன் 16, 2025 12:49 AM
விழுப்புரம் : வளவனுார் அருகே முன்விரோதம் காரணமாக சவ ஊர்வலத்தை மறித்து தகராறு செய்து மிரட்டிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம், கரையாம்புத்துார் பகுதியை சேர்ந்தவர் சபரிமணிகண்டன் மகன் சீனுவாசன், 22; இவரது தரப்பினருக்கும், வளவனுார் அருகேவுள்ள கலிஞ்சிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும், கடந்த மாதம் மதுபான பாரில் பிரச்னை ஏற்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் சீனுவாசன் தரப்பினர், அப்பகுதியில் இறந்த சகுந்தலா என்பவரின் சடலத்தை கலிஞ்சிக்குப்பம் தென்பெண்ணை ஆறு அருகே அடக்கம் செய்ய கடந்த 13ம் தேதி கொண்டு சென்றனர். அப்போது, கலிஞ்சிகுப்பத்தை சேர்ந்த தரணிவேல், 50; வீரமணி, 23; அய்யப்பகரன், 22; ஆகியோர் வழிமறித்து திட்டி, தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் தரணிவேல் உட்பட மூன்று பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.